பரிசுத்த ஆவியானவரின் முக்கியத்துவம்
"நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப்போதிக்கவேண்டுவதில்லை. அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது. அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக." (1 John 2:27). நாம் இயேசு கிறிஸ்து மூலமாக பெற்ற இந்த பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் சகலத்தையும் குறித்து நமக்கு போதிக்கிறது. அந்த அபிஷேகம் போதித்த படியே கிறிஸ்துவில் நிலைத்திருப்பீர்களா என்று மேற்கண்ட வசனம் நமக்கு சொல்கிறது. இயேசு கிறிஸ்துவுக்குள் நம்மை நலைத்திருக்க செய்கிறவர் இந்த பரிசுத்த ஆவியானவர். இயேசு கிறஸ்துவக்குள் நாம் நிலைத்திருக்கும் படியாக நமமை இவர் போதித்து நடத்துகிறார் "என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்,... (John 15:4). என்று இயேசு சொன்னார். நம்மை கிறிஸ்துவுக்குள் நிலைத்திருக்கச்செய்து கிறிஸ்துவை நம்மில் நிலைத்திருக்கச்செய்கிறவர் இந்த பரிசுத்த ஆவியானவர் அப்படியென்றால் முடிவு பரியந்தம் கிறிஸ்துவில் நலைத்திருக்க வேன்டுமானால் இந்த பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் நமக்கு மிகவும் தேவை
No comments:
Post a Comment