பரிசுத்த ஆவியின் முத்திரை

இரட்சிக்கப்பட்டு விசுவாசியாக மாற்றப்பட்ட உடன் பரிசுத்த ஆவியானவரால் முத்திரை தரிக்கப்படுகிறோம் என்று மேற்கண்ட வசனம் நமக்கு சொல்லுகிறது .அந்த பரிசுத்த ஆவியானவரின் முத்திரை தான் இயேசு கிறிஸ்துவின் வருகையில் நாம் மிட்கப்படுவோம் என்பதற்கு அடையாளம் என்று வேதம் சொல்கிறதே . நம்மை இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தப்படுத்துகிறவரும் இந்த பரிசுத்த ஆவியானவர்தான் நம்மை இயேசுவை போல் மாற்றி அவர் வருகையில் நம்மை மருரூபப்படுத்தி சேர்கிறவரும் இந்த பரிசுத்த ஆவியானவர்தான் கர்த்தரே ஆவியானவர். கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு. நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக்கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம் (2 Corinthians 3:17-18). மேற்கண்ட வசனத்தில் ஆவியானவர் தான் நம்மை இயேசுவின் சாயலுக்கு மறுருபப்படுத்துகிறவர் என்று வேதம் சொல்கிறது 1கொரிந்தியர் 15 : 51 , 52 -ல்இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகையில் நம்மை மறுருபப்படுத்தி இயேசு கிறிஸ்துவோடு நம்மை கொண்டு போய் சேர்கிறார் 1தெசலோனிக்கேயர்4:16,17 ல் கடைசி எக்காளம் தொனிக்கும் போது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களையும் உயிரோடு இருந்து கிறிஸ்துவுக்குள் இருப்பவர்களையும் இயேசுவோடு கொண்டு போய்விட்டு எப்போழதும் இயேசுவோடு இருக்கச்செய்கிறார் இந்த பரிசுத்த ஆவியானவரே.-பரிசுத்த ஆவியானவர் நம்முடைய வாழ்க்கையில் செய்கிற பல அனுபவங்களை பார்த்தோமே.அப்படியானால் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் எவ்வளவு முக்கியம்.அந்த அபிஷேகம் ஒரு பொக்கிசம் தானே.இதை வாசிக்கின்ற தேவபிள்ளையே,அப்படிப்பட்ட பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை இன்றே தேவனிடம் பெற்றுக்கொள்ளுங்கள்.லூக்கா11:13 -ல் பரிசுத்த ஆவியை கேட்பவர்களுக்கு பிதாவானவர் அந்த பரிசுத்த ஆவியை கொடுப்பார் எனறு சொன்னாரே.ஆகவே கேட்ப்போம் ,இயேசுவை போல் மாறி அவருடைய வருகைக்கு நம்மை ஆயத்தப்படுத்துவோம்
No comments:
Post a Comment