இன்றைய வசனம்

Kartharayea nambi jeevipom

கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்
கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்
கவலை கஷ்டங்கள் தீர்ந்திடும்
கைவிடா காத்திடும் பரமனின்
கரங்களை நாம் பற்றிக்கொள்வோம்
1. ஜீவ தேவன் பின் செல்லுவோம்
ஜீவ ஒளிதனை கண்டடைவோம்
மனதின் காரிருள் நீங்கிடவே
மா சமாதானம் தங்கும் 2
கர்த்தரை
2. உண்மை வழி நடந்திடும்
உத்தமனுக்கென்றும் கர்த்தர் துணை
கண்கள் அவன் மீது வைத்திடுவார்
கருத்தாய் காத்திடுவார் 2
கர்த்தரை
3. நீதிமானின் சிரசின் மேல்
நித்திய ஆசீர் வந்திறங்குமே
கிருபை, நன்மைகள் தொடருமே
கேட்பது கிடைக்குமே 2
கர்த்தரை

No comments:

Post a Comment

Newerpost Older post Home