இன்றைய வசனம்

Akkini nerupaai song lyricsAkkini nerupaai song lyrics

அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்
அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்அபிஷேகம் தந்து வழிநடத்தும் (2)
1. முட்செடி நடுவே தோன்றினீரே
மோசேயை அழைத்து பேசினீரே (2)
எகிப்து தேசத்திற்குக் கூட்டிச் சென்றீரே - (2)
எங்களை நிரப்பிப் பயன்படுத்தும் .. இன்று (2)
அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்
2. எலியாவின் ஜெபத்திற்கு பதில் தந்தீரே
இறங்கி வந்தீர் அக்கினியாய் (2)
இருந்த அனைத்தையும் சுட்டெரித்தீரே - (2)
எங்களின் குற்றங்களை எரித்து விடும் - (2)
3. ஏசாயா நாவை தொட்டது போல
எங்களின் நாவைத் தொட்டருளும் (2)
யாரை நான் அனுப்புவேன் என்று சொன்னீரே - (2)
எங்களை அனுப்பும் தேசத்திற்கு - (2)
4. அக்கினி மயமான நாவுகளாக
அப்போஸ்தலர் மேலே இறங்கி வந்தீரே (2)
அன்னிய மொழியை பேச வைத்தீரே - (2)
ஆவியின் வரங்களால் நிரப்பினீரே - (2)
5. இரவு நேரத்தில் நெருப்புத் துணாய்
இஸ்ரவேல் ஜனங்களை நடத்தினீரே - (2)
இருண்ட உலகத்தில் உம் சித்தம் செய்திட - (2)
எங்களை நிரப்பும் ஆவியினால் - (2)
song:akkini nerupai lyrics
album:jebathotta jeyageethangal
by father.s.j.berchmans

No comments:

Post a Comment

Newerpost Older post Home