இன்றைய வசனம்
Showing posts with label tamil christian songs lyrics. Show all posts
Showing posts with label tamil christian songs lyrics. Show all posts

ஆகாதது எதுவுமில்லை

ஆகாதது எதுவுமில்லை
ஆகாதது எதுவுமில்லை – உம்மால்
ஆகாதது எதுவுமில்லை
அகிலம் அனைத்தையும்
உண்டாக்கி ஆளுகின்றீர்
1. துதி செய்யத் தொடங்கியதும் எதிரிகள் தங்களுக்குள்
வெட்டுண்டு மடியச் செய்தீர்
உம்மால் ஆகும், எல்லாம் உம்மால் ஆகும்
2. அலங்கார வாசலிலே அலங்கோல முடவனன்று
நடந்தானே இயேசு நாமத்தில்
உம்மால் ஆகும், எல்லாம் உம்மால் ஆகும்
3. கோலும் கையுமாக பிழைக்கச் சென்றார் யாக்கோபு
பெருகச் செய்தீர் பெருங்கூட்டமாய்
உம்மால் ஆகும், எல்லாம் உம்மால் ஆகும்
4. கண்ணீரைக் கண்டதாலே கல்லறைக்குச் சென்றவனை
கரம் பிடித்துத் தூக்கி விட்டீர்
உம்மால் ஆகும், எல்லாம் உம்மால் ஆகும்
5. ஈசாக்கு ஜெபித்ததாலே ரெபேக்காள் கருவுற்று
இரட்டையர்கள் பெற்றெடுத்தாளே
உம்மால் ஆகும், எல்லாம் உம்மால் ஆகும்
6. எலியாவின் வார்த்தையாலே சாறிபாத் விதவை வீட்டில்
எண்ணெய் மாவு குறையவில்லையே
உம்மால் ஆகும், எல்லாம் உம்மால் ஆகும்
7. ஜெப வீரன் தானியேலை சிங்கங்களின் குகையினிலே
சேதமின்றிக் காப்பாற்றினீர்
உம்மால் ஆகும், எல்லாம் உம்மால் ஆகும்
8. கானவ+ரில் வார்த்தை சொல்ல கப்பர்நாகூம் சிறுவனங்கே
சுகமானான் அந்நேரமே
உம்மால் ஆகும், எல்லாம் உம்மால் ஆகும்
9. தண்ணீரால் ஜாடிகளை கீழ்படிந்து நிரப்பினதால்
திராட்சை ரசம் வந்ததையா
உம்மால் ஆகும், எல்லாம் உம்மால் ஆகும்

YESU KOODA VARUVAAR

இயேசு கூட வருவார்
இயேசு கூட வருவார்
எல்லாவித அற்புதம் செய்வார்
தந்தான தந்தனத் தானானா 2
1. நோய்கள் பேய்கள் ஓட்டிடுவார்
நொந்து போன உள்ளத்தை தேற்றிடுவார்
2. வேதனை துன்பம் நீக்கிடுவார்
சமாதானம் சந்தோஷம் எனக்குத் தருவார்
3. கடன் தொல்லை கஷ்டங்கள் நீக்கிடுவார்
கண்ணீர்கள் அனைத்தையும் துடைத்திடுவார்
4. எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவேன்
எதிரியான சாத்தானை முறியடிப்பேன்

Click here to download mp3

vinnappathai ketpavare lyrics

விண்ணப்பத்தைக் கேட்பவரே

விண்ணப்பத்தைக் கேட்பவரே என்
கண்ணீரைக் காண்பவரே
சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா
1.உம்மால் கூடும் எல்லாம் கூடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும்
2.மனதுருகி கரம் நீட்டி
அதிசயம் செய்தவரே (செய்பவரே)
3.சித்தம் உண்டு சுத்தமாகு
என்று சொல்லி சுகமாக்கினீர்ஐயா
4.என் நோய்களை சிலுவையிலே
சுமந்து தீர்த்தீரைய்யா
5. குருடர்களை பார்க்கச் செய்தீர்
முடவர்கள் நடக்கச் செய்தீர்
6.உம் காயத்தால் சுகமானேன்
ஒரு கோடி ஸ்தோத்திரமே


எந்தன் அன்புள்ள ஆண்டவர்

எந்தன் அன்புள்ள ஆண்டவர்
1. எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே நான்
உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன்
உம்மைப் போல் ஒரு தேவனைப் பூமியில் அறிந்திடேன்
உயிர் தந்த தெய்வம் நீரே
பல்லவி
ஆ! ஆனந்தம் ஆனந்தமே
அல்லும் பகலிலும் பாடிடுவேன்
இயேசுவே எந்தன் ஆருயிரே
2. பெற்ற தாயும் என் தந்தையுமானவரே
மற்றும் எல்லாம் எனக்கு நீரே
வானம் பூமியும் யாவுமே மாறிடினும் நீரோ
வாக்கு மாறாதவரே
3. உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தவரே
உந்தன் நாமத்தை நம்பிடுவேன்
உம்மையல்லாதிப் பூமியில் யாரையும் நம்பிடேன்
உயிருள்ள தெய்வம் நீரே
4. எந்தன் சிருஷ்டிகரே உம்மை நினைத்திடவே
தந்த வாலிப நாட்களிலே
இந்த மாய உலகத்தை வெறுத்திட அளித்தீரே
பரிசுத்த ஜீவியமே
5. பொன் வெள்ளியுமோ பெரும் பேர் புகழோ
பண ஆஸ்தியும் வீண் அல்லவோ
பரலோகத்தின் செல்வமே என் அருள் இயேசுவே
போதும் எனக்கு நீரே


Unnatha maanavarin

உன்னதமானவரின் உயர் மறைவிலிருக்கிறவன்
1. உன்னதமானவரின் - உயர் மறைவிலிருக்கிறவன்
சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்
இது பரம சிலாக்கியமே
பல்லவி
அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே
தம் சிறகுகளால் மூடுவார்
2. தேவன் என் அடைக்கலமே
என் கோட்டையும் அரணுமவர்
அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம்
என் நம்பிக்கையும் அவரே --- அவர்
3. இரவின் பயங்கரத்துக்கும்
பகலில் பறக்கும் அம்புக்கும்
இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்
நான் பயப்படவே மாட்டேன் --- அவர்
4. ஆயிரம் பதினாயிரம்
பேர்கள் உன் பக்கம் விழுந்தாலும்
அது ஒரு காலத்தும் உன்னை அணுகிடாதே
உன் தேவன் உன் தாபரமே --- அவர்
5. தேவன் உன் அடைக்கலமே
ஒரு பொல்லாப்பும் உன்னைச் சேருமோ
ஒரு வாதையும் உன் கூடாரத்தையே
அணுகாமலே காத்திடுவார் --- அவர்
6. உன் வழிகளிலெல்லாம்
உன்னைத் தூதர்கள் காத்திடுவார்
உன் பாதம் கல்லில் இடறாதபடி
தங்கள் கரங்களில் ஏந்திடுவார் --- அவர்
7. சிங்கத்தின் மேலும் நடந்து
வலுசர்ப்பத்தையும் மிதிப்பாய்
அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால்
உன்னை விடுவித்து காத்திடுவார் --- அவர்
8. ஆபத்திலும் அவரை நான்
நோக்கிக் கூப்பிடும் வேளையிலும்
என்னை தப்புவித்தே முற்றும் இரட்சிப்பாரே
என் ஆத்தும நேசரவர் --- அவர்


Older post Home