இன்றைய வசனம்
Showing posts with label tamil christian song lyrics. Show all posts
Showing posts with label tamil christian song lyrics. Show all posts

yennai nadathum yesu nadha

என்னை நடத்தும் இயேசு நாதா:
என்னை நடத்தும் இயேசு நாதா
உமக்கு நன்றி ஐயா
எனக்குள் வாழும் எந்தன் நேசா
உமக்கு நன்றி ஐயா
1. ஒளியாய் வந்தீர் வழியைத் தந்தீர்
உமக்கு நன்றி ஐயா
அழிவில் நின்று பாதுகாத்தீர்
உமக்கு நன்றி ஐயா
2. தேடி வந்தீர் பாட வைத்தீர்
உமக்கு நன்றி ஐயா
ஓடி ஓடி உழைக்கச் செய்தீர்
உமக்கு நன்றி ஐயா
3. பாவமில்லா தூயவாழ்வு
வாழச் செய்பவரே
பூவாய் வளர்ந்து பூத்துக் குலுங்கி
மலரச் செய்பவரே
4. துயரம் நீக்கி ஆறுதல் தந்தீர்
உமக்கு நன்றி ஐயா
புலம்பல் மாற்றி ஆனந்தம் தந்தீர்
உமக்கு நன்றி ஐயா
5. கலக்கம் நீக்கி கண்ணீர் துடைத்தீர்
உமக்கு நன்றி ஐயா
கவலை மாற்றி கரத்தால் அணைத்தீர்
உமக்கு நன்றி ஐயா
6. உலகம் மாயை எல்லாம் மாயை
உணர்ந்தேன் உணர்ந்து கொண்டேன்
உறவு பாசம் குப்பையென்றறிந்து
உம்மையே பின் தொடர்ந்தேன்

Singa kuttigal lyrics

சிங்கக் குட்டிகள்
சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும்
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே
குறையில்லையே குறையில்லையே
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே
1.புல்லுள்ள இடங்களிலே
என்னை மேய்க்கின்றார்
தண்ணீரண்டை கூட்டிச் சென்று
தாகம் தீர்க்கின்றார்
2.எதிரிகள் முன் விருந்தொன்றை
ஆயத்தப்படுத்துகிறார்
என் தலையை எண்ணெயினால்
அபிஷேகம் செய்கின்றார்
3.ஆத்துமாவை தேற்றுகின்றார்
ஆவி பொழிகின்றார்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
கிருபை என்னைத் தொடரும்
4.என் தேவன் தம்முடைய
மகிமை செல்வத்தினால்
குறைகளையே கிறிஸ்துவுக்குள்
நிறைவாக்கி நடத்திடுவார்



Theninimayilum song lyrics

தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
திவ்விய மதுரமாமே - அதைத்
தேடியே நாடி ஓடியே வருவீர், திருச்சபையானோரே
1. காசினிதனிலே நேசமதாகக்
கஷ்டத்தை உத்தரித்தே - பாவக்
கசடதை அறுத்துச் சாபத்தைத் தொலைத்தார்
கண்டுனர் நீமனமே
2. பாவியை மீட்கத் தாவியே உயிரைத்
தாமே ஈந்தவராம் - பின்னும்
நேமியாம் கருணை நிலைவரமுண்டு
நிதம் துதி நீ மனமே
3. காலையில் பனிபோல் மாயமாய் உலகம்
உபாயமாய் நீங்கிவிடும் - என்றும்
கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு
கருத்தாய் நீ மனமே
4. துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல
துணைவராம் நேசரிடம் - நீயும்
அன்பதாய்ச் சேர்த்தால் அணைத்துனைக் காப்பார்
ஆசை கொள் நீ மனமே.
5. பூலோகத்தாரும் மேலோகத்தாரும்
புகழ்ந்து போற்றும் நாமம் - அதைப்
பூண்டுகொண்டால்தான் பொன்னகர் வாழ்வில்
புகுவாய் நீ மனமே

Unthan aave enthan lyrics

உந்தன் ஆவி எந்தன் உள்ளம் தங்க வேண்டும்
உந்தன் ஆவி எந்தன் உள்ளம் தங்க வேண்டும்
எந்த நாளும் உந்தன் நாமம் பாட வேண்டும்
1. உள்ளம் எல்லாம் அன்பினாலே
பொங்கவேண்டும்
கள்ளம் நீங்கி காலமெல்லாம்
வாழ வேண்டும்
2. பாவமான சுபாவம்
எல்லாம் நீங்க வேண்டும்
தேவ ஆவி தேற்றி
என்றும் நடத்த வேண்டும்
3. ஜீவ தண்ணீர் நதியாகப்
பாய வேண்டும்
சிலுவை நிழலில் தேசமெல்லாம்
வாழ வேண்டும்
4. வரங்கள் கனிகள் எல்லா நாளும்
பெருக வேண்டும்
வாழ்நாளெல்லாம் பணிசெய்து
மடிய வேண்டும்
5. ஏதேன் தோட்ட உறவு என்றும்
தொடர வேண்டும்
இயேசு கிறிஸ்து குரலைக் கேட்டு
மகிழ வேண்டும்


Ungal thukkam santhosamaga maarum lyrics

உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்
உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்
உங்கள் கவலைகள் கண்ணீர் எல்லாம் மறைந்து விடும்
கலங்காதே மகனே, கலங்காதே மகளே
1. கடந்ததை நினைத்து கலங்காதே
நடந்ததை மறந்து விடு
கர்த்தர் புதியன செய்திடுவார்
இன்றே நீ காண்பாய்.. கலங்கிடவே வேண்டாம்

என் இயேசு கைவிடமாட்டார்
2. நொறுங்குண்ட இதயம் தேற்றுகிறார்
உடைந்த உள்ளம் தாங்குகிறார்
காயங்கள் அனைத்தையும் கட்டுகிறார்
கண்ணீர் துடைக்கின்றார் (உன்)
3. திராணிக்கு மேலாக சோதிக்கப்பட
ஒரு நாளும் விட மாட்டார்
தாங்கிடும் பெலன் தருவார்
தப்பி செல்ல வழி செய்வார் (நீ)
4. நல்லதோர் போராட்டம் போராடுவோம்
விசுவாசம் காத்துக் கொள்வோம்
நீதியின் கிரீடம் நமக்கு உண்டு
நேசர் வருகையில் தந்திடுவார்நம்
5. மாலையில் மகனே அழுகின்றாயா
காலையில் அக மகிழ்வாய்
நித்திய பேரானந்தம்
நேசரின் சமூகத்திலே
6. அக்கினியின் மேல் நடந்தாலும்
எரிந்து போகமாட்டாய்
ஆறுகளை நீ கடந்தாலும்
மூழ்கி போக மாட்டாய்
7. முழுமையாய் மனம் திரும்பி விடு
முற்றிலும் வாழ்வை ஒப்புக்கொடு
வேண்டாத அனைத்தையும் விட்டுவிடு
ஆண்டவர் விருப்பம் நிறைவேற்று
எங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்
எங்கள் கவலைகள் கண்ணீர்
எல்லாம் மறைந்து விடும்
கலங்கிடவே மாட்டோம் நாங்கள்
கலங்கிடவே மாட்டோம்


Asaivadum aviye lyrics

அசைவாடும் ஆவியே
அசைவாடும் ஆவியே
தூய்மையின் ஆவியே (2)
இடம் அசைய உள்ம் நிரம்ப
இறங்கி வாருமே(2)
பெலனடைய நிரப்பிடுமே
பெலத்தின் ஆவியே (2)
கனமடைய ஊற்றிடுமே
ஞானத்தின் ஆவியே (2)
அசைவாடும்...
தேற்றிடுமே உள்ங்களை
இயேசுவின் நாமத்தினால் (2)
ஆற்றிடுமே காயங்களை
அபிஷேக தைலத்தினால் (2)
அசைவாடும்...
துடைத்திடுமே கண்ணீரெல்லாம்
கிருபையின் பொற்கரத்தால் (2)
நிறைத்திடுமே ஆனந்தத்தால்
மகிழ்வுடன் துதித்திடவே (2)
அசைவாடும்...


Adimai naan aandavare lyrics

அடிமை நான் ஆண்டவரே
அடிமை நான் ஆண்டவரே
அடிமை நான் ஆண்டவரே - என்னை
ஆட்கொள்ளும் என் தெய்வமே
தெய்வமே தெய்வமே
அடிமை நான் ஆட்கொள்ளும்
1.என் உடல் உமக்குச் சொந்தம் - இதில்
எந்நாளும் வாசம் செய்யும்
2.உலக இன்பமெல்லாம் - நான்
உதறித் தள்ளி விட்டேன்
3.பெருமை செல்வமெல்லாம் - இனி
வெறுமை என்றுணர்ந்தேன்
4.வாழ்வது நானல்ல - என்னில்
இயேசுவே வாழ்கின்றீர்
5.என் பாவம் மன்னித்தருளும் - உம்
இரத்தத்தால் கழுவிவிடும்
6.முள்முடி எனக்காக - ஐயா
கசையடி எனக்காக
7.என் பாவம் சுமந்து கொண்டீர் - என்
நோய்கள் ஏற்றுக் கொண்டீர்


Vallamayin aviyanavar lyrics

வல்லமையின் ஆவியானவர்:
வல்லமையின் ஆவியானவர் என்னுள்
வந்து விட்ட காரணத்தினால்
பொல்லாத சாத்தானை ஒரு
சொல்லாலே விரட்டி விட்டேன்
1.பவர் ஆவி எனக்குள்ளே---- அந்த
பய ஆவி அணுகுவதில்லை
அன்பின் ஆவி எனக்குள்ளே------ நான்
அகற்றிவிட்டேன் கசப்புகளை

2.கட்டுப்பாட்டின் ஆவியானவர்
என்னை பண்ணி நடத்துகிறார்
இஷ்டம் போல அலைவதில்லை
அவர் சித்தம் செய்து வாழ்பவன் நான்
3.கிறிஸ்துவுக்குள் நறுமணம் நான்
தெருத் தெருவா மணம் வீசுவேன்
மீட்புபெறும் அனைவருக்கும்------ நான்
வாழ்வளிக்கும் வாசனையானேன்
4.உலகத்திற்கு வெளிச்சம்------ நான்
ஊரெல்லாம் அடிப்பேன்
உப்பாக பரவிடுவேன்------- நான்
எப்போதும் சுவை தருவேன்
5.கர்த்தரின் முத்திரை என் மேல்------- நான்
முற்றிலும் அவருக்குச் சொந்தம்
அச்சாரமாய் ஆவியானவர்------- நான்
நிச்சயமாய் மீட்பு பெறுவேன்
6.தேவனாலே பிறந்தவன் நான்
எந்த பாவமும் செய்வதில்லை
கர்த்தரே பாதுகாக்கிறார்
தீயோன் என்னை தீண்டுவதில்லை
7.கடவுள் எனக்கு வாக்களித்ததை
நிறைவேற்ற வல்லவரென்று
நிச்சயமாய் நம்பினதாலே------ நான்
நம்பிக்கையில் வல்லவனானேன் (வளர்கின்றேன்)


Santhosam ponguthey lyrics

சந்தோஷம் பொங்குதே
சந்தோஷம் பொங்குதே
சந்தோஷம் பொங்குதே சந்தோஷம் பொங்குதே
சந்தோஷம் என்னில் பொங்குதே
இயேசு என்னை இரட்சித்தார் முற்றும் என்னை மாற்றினார்
சந்தோஷம் பொங்கிப் பொங்குதே
1. வழி தப்பி நான் திரிந்தேன் பாவப் பழியதைச் சுமந்தலைந்தேன்
அவர் அன்புக் குரலே அழைத்தது என்னையே
அந்த இன்ப நாளில் எந்தன் பாவம் நீங்கிற்றே
2. சத்துரு சோதித்திட தேவ உத்தரவுடன் வருவான்
ஆனால் இயேசு கைவிடார் தானாய் வந்து இரட்சிப்பார்
அந்த நல்ல இயேசு எந்தன் சொந்தமானாரே
3. பாவத்தில் ஜீவிப்பவர் பாதாளத்தில் அழிந்திடுவார்
நானோ பரலோகத்தில் நாளும் பாடல் பாடிடுவேன்
என்னில் வாழும் இயேசுவோடு என்றும் வாழுவேன்



Kartharayea nambi jeevipom

கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்
கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்
கவலை கஷ்டங்கள் தீர்ந்திடும்
கைவிடா காத்திடும் பரமனின்
கரங்களை நாம் பற்றிக்கொள்வோம்
1. ஜீவ தேவன் பின் செல்லுவோம்
ஜீவ ஒளிதனை கண்டடைவோம்
மனதின் காரிருள் நீங்கிடவே
மா சமாதானம் தங்கும் 2
கர்த்தரை
2. உண்மை வழி நடந்திடும்
உத்தமனுக்கென்றும் கர்த்தர் துணை
கண்கள் அவன் மீது வைத்திடுவார்
கருத்தாய் காத்திடுவார் 2
கர்த்தரை
3. நீதிமானின் சிரசின் மேல்
நித்திய ஆசீர் வந்திறங்குமே
கிருபை, நன்மைகள் தொடருமே
கேட்பது கிடைக்குமே 2
கர்த்தரை

Older post Home