இன்றைய வசனம்
Showing posts with label tamil christian song lyrics. Show all posts
Showing posts with label tamil christian song lyrics. Show all posts

Akkini abisegam Eenthidum

அக்கினி அபிஷேகம் ஈந்திடும்:
1. பரமன் இயேசுவை நிறைத்தீரே
பரிசுத்த ஆவியால் நிறைத்திடும்
உந்தன் சீஷருக்களித்தீரெ
அன்பின் அபிஷேகம் ஈந்திடும்
தேவா தேவா இக்கணமே ஈந்திடும் --- அக்கினி

உமக்கு நன்றி ஐயா
2. சிம்சோன் கிதியோனை நிறைத்தீரே
கர்த்தரின் வல்லமையால் நிறைத்திடும்
தீர்க்கன் எலிசாவுக் களித்தீரே
இரட்டிப்பின் வரங்களால் நிறைத்திடும்
தேவா தேவா இக்கணமே ஈந்திடும் --- அக்கினி
3. அன்பர் இயேசுவின் நாமத்திலே
வன் துயர் பேய் பிணி நீங்கவே
அற்புதம் அடையாளம் நிகழ்ந்திடவே
பொற்பரன் ஆவியால் நிறைத்திடும்
தேவா தேவா இக்கணமே ஈந்திடும் --- அக்கினி
4. வானில் இயேசு வருகையிலே
நானும் மறுரூபம் ஆகவே
எந்தன் சாயல் மாறிடவே
மைந்தன் ஆவியால் நிறைத்திடும்
தேவா தேவா இக்கணமே ஈந்திடும் --- அக்கினி



Yethanai nanmai yethnai inbam

எத்தனை நன்மை எத்தனை இன்பம் :
எத்தனை நன்மை எத்தனை இன்பம்
சகோதரர்கள் ஒருமித்து வாசம் பண்ணும்போது
1. அது ஆரோன் தலையில் ஊற்றப்பட்ட நறுமணம்
முகத்திலிருந்து வழிந்தோடி உடையை நனைக்கும்
2. அது சீயோன் மலையில் இறங்குகின்ற பனிக்கு ஒப்பாகும்
இளைப்பாறுதல் சமாதானம் இங்கு உண்டாகும்
3. இங்கு தான் முடிவில்லாத ஜீவன் உண்டு
இங்கு தான் எந்நாளும் ஆசீர் உண்டு
4. இருவர் மூவர் இயேசு நாமத்தில் கூடும் போதெல்லாம்
அங்கு நான் இருப்பேனென்று இரட்சகர் சொன்னாரே



koodume ellaam koodume lyrics

கூடுமே எல்லாம் கூடுமே:
கூடுமே எல்லாம் கூடுமே
உம்மாலே எல்லாம் கூடும்
கூடாதது ஒன்றுமில்லை உம்மால்
கூடாதது ஒன்றுமில்லை

1.கடல் மீது நடந்தீரையா கடும்புயல் அடக்கினீரே
சாத்தானை ஒடுக்கினீரே சர்வ வல்லவரே
2.செங்கடல் உம்மைக் கண்டு ஓட்டம் பிடித்ததையா
யோர்தான் உம்மைக் கண்டு பின்னோக்கிச் சென்றதையா
3. மரித்து உயிர்த்தீரையா மரணத்தை ஜெயித்தீரையா
மறுபடி வருவீரையா உருமாற்றம் தருவீரையா
4. உம் நாமம் சொன்னால் போதும் பேய்கள் ஓடுதையா
உம் பெயரால் கைநீட்டினால் நோய்கள் மறையுதையா
5. மலைகள் செம்மறி போல் துள்ளியது ஏன் ஐயா
குன்றுகள் ஆடுகள் போல் குதித்ததும் ஏன் ஐயா
6. வனாந்தர பாதையிலே ஜனங்களை நடத்தினீரே
கற்பாறை கன்மலையை நீரூற்றாய் மாற்றினீரே
7. உடல் கொண்ட அனைவருக்கும் உணவு ஊட்டுகிறீர்
கரையும் காகங்களுக்கு இரை கொடுத்து மகிழ்கிறீர்
8. பகலை ஆள்வதற்கு கதிரவனை உருவாக்கினீர்
இரவை ஆள்வதற்கு விண்மீனை உருவாக்கினீர்

Older post Home