Pages

Friday, July 15, 2011

Unthan aave enthan lyrics

உந்தன் ஆவி எந்தன் உள்ளம் தங்க வேண்டும்
உந்தன் ஆவி எந்தன் உள்ளம் தங்க வேண்டும்
எந்த நாளும் உந்தன் நாமம் பாட வேண்டும்
1. உள்ளம் எல்லாம் அன்பினாலே
பொங்கவேண்டும்
கள்ளம் நீங்கி காலமெல்லாம்
வாழ வேண்டும்
2. பாவமான சுபாவம்
எல்லாம் நீங்க வேண்டும்
தேவ ஆவி தேற்றி
என்றும் நடத்த வேண்டும்
3. ஜீவ தண்ணீர் நதியாகப்
பாய வேண்டும்
சிலுவை நிழலில் தேசமெல்லாம்
வாழ வேண்டும்
4. வரங்கள் கனிகள் எல்லா நாளும்
பெருக வேண்டும்
வாழ்நாளெல்லாம் பணிசெய்து
மடிய வேண்டும்
5. ஏதேன் தோட்ட உறவு என்றும்
தொடர வேண்டும்
இயேசு கிறிஸ்து குரலைக் கேட்டு
மகிழ வேண்டும்


No comments:

Post a Comment