Pages

Sunday, June 19, 2011

Kartharai nambiye jeevipom

கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்
கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்
கவலை கஷ்டங்கள் தீர்ந்திடும்
கைவிடா காத்திடும் பரமனின்
கரங்களை நாம் பற்றிக் கொள்வோம்
1. ஜீவ தேவன் பின் செல்லுவோம்
ஜீவ ஒளிதனைக் கண்டடைவோம்
மனதின் காரிருள் நீங்கிடவே
மா சமாதானம் தங்கும் --- கர்த்தரை
2. உண்மை வழி நடந்திடும்
உத்தமனுக்கென்றும் கர்த்தர் துணை
கண்கள் அவன்மீது வைத்திடுவார்
கருத்தாய்க் காத்திடுவார் --- கர்த்தரை
3. உள்ளமதின் பாரங்களை
ஊக்கமாய்க் கர்த்தரிடம் சொல்லுவோம்
இக்கட்டு நேரத்தில் கூப்பிடுவோம்
இயேசு வந்தாதரிப்பார் --- கர்த்தரை


No comments:

Post a Comment